Thursday, November 15, 2012

50களில் சிறுகதை வளர்ச்சி

50களில் சிறுகதை வளர்ச்சி  கட்டுரைச் சட்டகம்.
இங்கே சொடுக்கவும்.

50களில் சிறுகதை வளர்ச்சி

இப்பதிவினைத் தந்துதவிய நல்லாசிரியர் திரு. கு. பூபதி அவர்களுக்கு நன்றி.

சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள்

சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள் கட்டுரைச் சட்டகம்
இங்கே சொடுக்கவும்.

http://www.ziddu.com/download/20890223/Sanggammaruviakalatthilaranoolgal.pdf.html

இப்பதிவினைத் தந்துதவிய நல்லாசிரியர் திரு. கு. பூபதி அவர்களுக்கு நன்றி.

அந்திம காலம் நாவல்

வணக்கம். அந்திம காலம் நாவலைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.நன்றி.

அந்திம காலம் நாவல்

ஆசிரியர் திரு.கு.பூபதி (ஸ்கூடாய் இடைநிலைப்ள்ளி)
அவர்களுக்கு நன்றி.

Monday, November 5, 2012

STPM தமிழ்மொழி பாடத்திட்டம் வாசித்தலும் கருத்துணர்தலும்



STPM மிழ்மொழி
பாத்திட்டம்
 
1 வாசித்தலும் கருத்துணர்தலும்


மாணவர்கள் உறுதியாக: 

(அ) முக்கியக் கருத்துகள், துணைக் கருத்துகளை அடையாளம் காண்பர்;

(ஆ) கருத்துணர் கேள்விகளுக்கு ஆய்வுச் சிந்தனை, ஆக்கச் சிந்தனை அடிப்படையில் விடையளிப்பர்;

(இ) தெரிநிலை, புதைநிலை ஏடல்களை வேறுபடுத்துவர்;

(ஈ) பனுவலிலுள்ள கருத்துகளைப் பகுத்தாய்வர், மதிப்பிடுவர்;

(உ) பனுவலைப் பகுத்தாய்வர்; விளக்குவர்.

உரைநடை அல்லது உரைநடை அல்லாத பனுவல்கள் இப்பிரிவில் இடம்பெறும்.

இப்பிரிவில் இணையம், அச்சுயியல், மின்னியல் ஆகிய தகவல் ஊடகங்களில் வெளியான உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் மொழி இலக்கியப் படைப்புகள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட 400-450 சொற்கள் கொண்ட பனுவல் ஒன்று கொடுக்கப்படும்.

இப்பனுவல் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலை, பண்பாடு, மொழி, இலக்கியம், சமூகவியல், சமகாலப் பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும்.

இப்பகுதியில் ஐந்து கேள்விகள் கொடுக்கப்படும். மாணவர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.



2 இலக்கணம்:

சொல்லியல்

      (i) பெயர்ச்சொல்

                 —    பொருட்பெயர்
                 —    இடப்பெயர்
                     காலப்பெயர்
                 —    சினைப்பெயர்
                 —    பண்புப்பெயர்
                 —    தொழிற்பெயர்


மாணவர்கள் உறுதியாக:

(அ) தமிழிலுள்ள பெயர்ச்சொற்களின் வகைகளை அறிவர்; முறையாகப் பிழையின்றிப் பயன்படுத்துவர்;

     (ii) வினைச்சொல்
             தெரிநிலை  வினைமுற்று
             குறிப்பு வினைமுற்று 

     (iii) பெயரெச்சம், வினையெச்சம் 

     (iv)  பெயரடை, வினையடை 

     (v)  இடைச்சொல் 
         வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள், 
         சாரியைகள்,  வினா எழுத்துகள், சுட்டு எழுத்துகள், அசைச் சொற்கள், உம், உவம 
         உருபுகள், அம், கொல்மற்று, ,
 
(ஆ) வினைமுற்றுகளின் வகைகள், பயன்பாடு முதலியவற்றை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர்;

(இ) அடைகளுக்கும் எச்சங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர்;

(ஈ) வாக்கியத்தில் அடைகள், எச்சங்கள் ஆகியவற்றின் பங்கினை அறிவர், பிழையின்றிப் பயன்படுத்துவர்;

(உ) இடைச்சொற்களை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர். 

இப்பிரிவில் இரண்டு கேள்விகள் கொடுக்கப்படும் மாணவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


ன்றி : லேசித் தேர்வு வாரியம்
தொகுப்பு: ந.மிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, ஜொகூர்.  

STPM தமிழ் மொழி பாடத்திட்டம் 912 குறியிலக்கு



STPM     தமிழ் மொழி
பாடத்திட்டம் 912

குறியிலக்கு

இப்பாடத்திட்டம் மாணவர்கள் கீழ்க்கண்டவற்றை அடையும் குறியிலக்குகளைக் கொண்டுள்ளது:

(அ) உயர்நிலைப் பள்ளிக்கு ஏற்புடைய தமிழ் மொழி ஆற்றலைப் பெற்றிருப்பர்;

(ஆ) உயர்கல்விக்கும் தொழிலுக்கும் தேவைப்படும் தமிழ் மொழியின் பயன்பாட்டு ஆற்றலை மேம்படுத்திக் கொள்வர்;

(இ) தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறுகளை அறிவர்;

(ஈ) தமிழ்ப் படைப்பிலக்கிய வடிவங்கள், கோட்பாடுகள், திறனாய்வுச் சிந்தனைகள் ஆகிய கூறுகளில் கற்றலை மேம்படுத்துவர்;

(உ) சங்க, இடைக்கால, நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை உய்த்துணர்தலின்வழி ஆன்மீக, உள உணர்வுகளைச் செழுமையுறச் செய்வர்.

நோக்கம்

இப்பாடத்திட்டம் மாணவர்கள் கீழ்க்கண்டவற்றை அடையும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:

(அ) தமிழ் மொழியின் இலக்கணம், சொற்களஞ்சியம், நடை ஆகியவற்றைச் சரியாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்துவர்;

(ஆ) தமிழ் மொழியிலுள்ள பல்வகை உரைநடைப் பனுவல்களையும் கவிதைகளையும் பகுத்தாய்வர்; தொகுத்தாய்வர்; மதிப்பிடுவர்;

(இ) பொருத்தமான மற்றும் ஏற்புடைய தமிழ் மொழியைப் பயன்படுத்திப் பல்துறை சார்ந்த தரமான கட்டுரைகளைப் படைப்பர்;

(ஈ) தமிழ் இலக்கியப் படைப்புகளின் முருகியல், நயம், சிந்தனை, அறிவாற்றல், நன்னெறி மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவர்;

(உ) சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியத்தின் உன்னதங்களை மதிப்பிடுவர்; விளக்குவர்;

(ஊ) சங்க, இடைக்கால, நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளைத் திறனாய்வு செய்வர்; கருத்துரைப்பர்.

நன்றி: மலேசியத் தேர்வு வாரியம்
தொகுப்பு: ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, ஜொகூர்.