STPM தமிழ் மொழி
பாடத்திட்டம் 912
குறியிலக்கு
இப்பாடத்திட்டம் மாணவர்கள்
கீழ்க்கண்டவற்றை அடையும் குறியிலக்குகளைக் கொண்டுள்ளது:
(அ) உயர்நிலைப் பள்ளிக்கு ஏற்புடைய தமிழ் மொழி ஆற்றலைப்
பெற்றிருப்பர்;
(ஆ) உயர்கல்விக்கும்
தொழிலுக்கும் தேவைப்படும் தமிழ் மொழியின் பயன்பாட்டு ஆற்றலை மேம்படுத்திக் கொள்வர்;
(இ) தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறுகளை அறிவர்;
(ஈ) தமிழ்ப்
படைப்பிலக்கிய வடிவங்கள், கோட்பாடுகள், திறனாய்வுச் சிந்தனைகள் ஆகிய கூறுகளில் கற்றலை
மேம்படுத்துவர்;
(உ) சங்க, இடைக்கால, நவீன
தமிழ் இலக்கியப் படைப்புகளை உய்த்துணர்தலின்வழி ஆன்மீக, உள உணர்வுகளைச் செழுமையுறச் செய்வர்.
நோக்கம்
இப்பாடத்திட்டம் மாணவர்கள்
கீழ்க்கண்டவற்றை அடையும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:
(அ) தமிழ் மொழியின்
இலக்கணம்,
சொற்களஞ்சியம், நடை ஆகியவற்றைச் சரியாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்துவர்;
(ஆ) தமிழ் மொழியிலுள்ள
பல்வகை உரைநடைப் பனுவல்களையும் கவிதைகளையும் பகுத்தாய்வர்; தொகுத்தாய்வர்; மதிப்பிடுவர்;
(இ) பொருத்தமான மற்றும்
ஏற்புடைய தமிழ் மொழியைப் பயன்படுத்திப் பல்துறை சார்ந்த தரமான கட்டுரைகளைப்
படைப்பர்;
(ஈ) தமிழ் இலக்கியப்
படைப்புகளின் முருகியல், நயம், சிந்தனை, அறிவாற்றல், நன்னெறி மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவர்;
(உ) சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியத்தின்
உன்னதங்களை மதிப்பிடுவர்; விளக்குவர்;
(ஊ) சங்க, இடைக்கால, நவீன
தமிழ் இலக்கியப் படைப்புகளைத் திறனாய்வு செய்வர்; கருத்துரைப்பர்.
நன்றி: மலேசியத் தேர்வு வாரியம்
தொகுப்பு: ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, ஜொகூர்.
No comments:
Post a Comment