STPM தமிழ்மொழி மதிப்பீடு
தமிழ்மொழித் தேர்வு மூன்று தவணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மலேசியத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகின்றது.
தவணை 1
தாள் 912/1 (2 மணி)
இவ்வினாத்தாள் A,
B, C, D ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
A பிரிவில் வாசித்தல் கருத்துணர்தல் பகுதியிலிருந்து ஐந்து
வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். (30 புள்ளிகள்)
B பிரிவில் இலக்கணத்தில் சொல்லியல் பகுதியிலிருந்து இரண்டு
வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். (20 புள்ளிகள்)
C பிரிவில் நவீன இலக்கியம் கவிதை பகுதியிலிருந்து இரண்டு சிறு
குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு
வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25
புள்ளிகள்)
D பிரிவில் தமிழ் மொழி,
தமிழ் இலக்கிய வரலாறும் வளர்ச்சியும் பகுதியிலிருந்து இரண்டு சிறு குறிப்பு
வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும்
பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)
தவணை 2
தாள் 912/2 (2 மணி)
இவ்வினாத்தாள் A,
B, C, D ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
A பிரிவில் கட்டுரை அடிப்படையிலான கருத்துரைத்தல் கேள்வி
ஒன்று கேட்கப்படும். மாணவர்கள் இவ்வினாவிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)
B பிரிவில் தொடரியல் குறித்து மூன்று சிறு குறிப்பு வினாக்கள்
கேட்கப்படும். மாணவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)
C பிரிவில் சங்க இலக்கியம் மற்றும் காப்பிய இலக்கியம்
குறித்து இரண்டு சிறு குறிப்பு அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள்
ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)
D பிரிவில் நவீன இலக்கியம் நாவல் குறித்து இரண்டு சிறு குறிப்பு
அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க
வேண்டும். (25 புள்ளிகள்)
தவணை 3
தாள் 912/3 (2 மணி)
இந்தத் தவணைக்கான மதிப்பீட்டு முறை A, B, C ஆகிய மூன்று
பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
A பிரிவில் பொது வடிவம். சிறப்பு வடிவம் அடங்கிய மூன்று
கட்டுரை தலைப்புகள் வழங்கப்படும். மாணவர்கள் ஒரு தலைப்பை மட்டும் தெரிவுசெய்து 450 முதல் 500 சொற்களூக்குள்
கட்டுரை எழுத வேண்டும். (50 புள்ளிகள்)
B பிரிவில் இடைக்காலம் மற்றும் நீதி இலக்கியத்தையொட்டி இரண்டு
சிறு குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு
வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25
புள்ளிகள்)
C பிரிவில் தமிழ்ச் சிறுகதையையொட்டி இரண்டு சிறு குறிப்பு வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் கேட்கப்படும். மாணவர்கள் ஒரு வினாவிற்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். (25 புள்ளிகள்)
நன்றி : STPM தமிழ்மொழிப் பாடத்திட்டம், மலாயாப் பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment