STPM தமிழ்மொழி
பாடத்திட்டம்
1 வாசித்தலும்
கருத்துணர்தலும்
மாணவர்கள்
உறுதியாக:
(அ) முக்கியக் கருத்துகள், துணைக் கருத்துகளை
அடையாளம் காண்பர்;
(ஆ) கருத்துணர் கேள்விகளுக்கு ஆய்வுச் சிந்தனை, ஆக்கச்
சிந்தனை அடிப்படையில் விடையளிப்பர்;
(இ) தெரிநிலை, புதைநிலை ஏடல்களை வேறுபடுத்துவர்;
(ஈ) பனுவலிலுள்ள கருத்துகளைப் பகுத்தாய்வர், மதிப்பிடுவர்;
(உ) பனுவலைப் பகுத்தாய்வர்; விளக்குவர்.
உரைநடை
அல்லது உரைநடை அல்லாத பனுவல்கள் இப்பிரிவில் இடம்பெறும்.
இப்பிரிவில்
இணையம், அச்சுயியல், மின்னியல் ஆகிய தகவல் ஊடகங்களில்
வெளியான உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் மொழி இலக்கியப் படைப்புகள்
முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட 400-450 சொற்கள் கொண்ட
பனுவல் ஒன்று கொடுக்கப்படும்.
இப்பனுவல்
அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கலை,
பண்பாடு, மொழி, இலக்கியம்,
சமூகவியல், சமகாலப் பிரச்சினைகள்
ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும்.
இப்பகுதியில்
ஐந்து கேள்விகள் கொடுக்கப்படும். மாணவர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க
வேண்டும்.
2 இலக்கணம்:
சொல்லியல்
(i)
பெயர்ச்சொல்
— பொருட்பெயர்
— இடப்பெயர்
— காலப்பெயர்
— சினைப்பெயர்
— பண்புப்பெயர்
— தொழிற்பெயர்
மாணவர்கள்
உறுதியாக:
(அ) தமிழிலுள்ள பெயர்ச்சொற்களின் வகைகளை அறிவர்; முறையாகப்
பிழையின்றிப் பயன்படுத்துவர்;
(ii)
வினைச்சொல்
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
(iii) பெயரெச்சம், வினையெச்சம்
(iv) பெயரடை, வினையடை
(v) இடைச்சொல்
வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள்,
சாரியைகள், வினா எழுத்துகள்,
சுட்டு எழுத்துகள், அசைச் சொற்கள், உம், உவம
உருபுகள், அம், கொல், மற்று, ஏ, ஓ
(ஆ) வினைமுற்றுகளின் வகைகள், பயன்பாடு முதலியவற்றை
அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர்;
(இ) அடைகளுக்கும் எச்சங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவர்; பிழையின்றிப் பயன்படுத்துவர்;
(ஈ) வாக்கியத்தில் அடைகள், எச்சங்கள் ஆகியவற்றின்
பங்கினை அறிவர், பிழையின்றிப் பயன்படுத்துவர்;
(உ) இடைச்சொற்களை அறிவர்; பிழையின்றிப்
பயன்படுத்துவர்.
இப்பிரிவில்
இரண்டு கேள்விகள் கொடுக்கப்படும் மாணவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க
வேண்டும்.
நன்றி : மலேசியத் தேர்வு வாரியம்
தொகுப்பு: ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி, ஜொகூர்.
No comments:
Post a Comment